பருத்தித்துறையில் புதிய துறைமுகம் அமைக்க தீர்மானம்

பருத்தித்துறையில் 7 மில்லியன் ரூபா செலவில் புதிய துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறையில் மற்றொரு துறைமுகத்தினை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று கொட்டி பகுதியில் கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடற்றொழில் துறைமுகமாக பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இரண்டு துறைமுகங்கள் அடையாளம் காணப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்பில் துறைமுகங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.

முதற்கட்டமாக 7 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பருத்தித்துறை துறைமுகம் புனரமைப்புச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, மக்கள் தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். அரசாங்கமும் தனது அபிப்பிராயத்தினை கூறியுள்ளது.

மிக விரைவில் மக்களின் பிரச்சினைகளை மீளாய்வு செய்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here