பவுண்ட் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி!

பிரித்தானிய பவுண்ட் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பாரிய அளவிலான சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகத்தின் தகவல்களுக்கமைய குறித்த காலப்பகுதியில் 8.3 மில்லியன் பேர் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 9.9 வீத அதிகரிப்பாகும். அத்துடன் 5 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவுக்கு சென்ற பயணிகளின் அதிக எண்ணிக்கை இதுவாகும்.

15.6 வீத செலவுகளை அவர்கள் பிரித்தானியாவில் மேற்கொண்டுள்ளனர். அதன் பெறுமதி 4.4 பில்லியன் பவுண்டுகளாகும்.

ஆனால் அதே நேரத்தில் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சியானது, வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள பிரித்தானியர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் பிரித்தானியர்கள் 14.1 மில்லியன் வெளிநாட்டு பயணங்களையே மேற்கொண்டுள்ளனர்.

பவுண்ட் சரிவு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பிரித்தானியாவுக்கு வருவதற்கு சாதகமான தன்மையை ஏற்படுத்திய போதிலும் பிரித்தானியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான செலவுகளை அதிகரித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here