புலம்பெயர்ந்து வாழக்கூடிய சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு!

மக்கள் புலம்பெயர்ந்து வாழக்கூடிய சிறந்த நாடுகளின் பட்டியல் ஒன்றை US News and World Report என்ற தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, மக்கள் புலம்பெயர்ந்து வாழக்கூடிய சிறந்த நாடாக சுவீடன் பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டாமிடத்தை கனடாவும், மூன்றாமிடத்தை சுவிட்சர்லாந்தும், நான்காமிடத்தை அவுஸ்திரேலியாவும் பெறுகின்றன.

நியூசிலாந்து 13வது இடத்தில் உள்ள அதேநேரம் சிங்கப்பூர் 18வது இடத்திலும் உள்ளன. மேலும் மலேசியா 57வது இடத்தையும், இந்தியா 72 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த பட்டியலில் இலங்கைக்கு 71வது இடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக US News and World Report வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டினதும் தனிநபர் வருமானம், ஆயுட்காலம், அரச உதவிகள், தாராள மனப்பான்மை, சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

US News and World Report வெளியிட்டுள்ள புலம்பெயர்ந்து வாழ சிறந்த நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன.

 1. Sweden
 2. Canada
 3. Switzerland
 4. Australia
 5. Germany
 6. Norway
 7. United States
 8. Netherlands
 9. Finland
 10. Denmark
 11. Luxembourg
 12. Austria
 13. New Zealand
 14. France
 15. United Arab Emirates
 16. Ireland
 17. United Kingdom
 18. Singapore
 19. Italy
 20. Japan
 21. China
 22. Spain
 23. Qatar
 24. Russia
 25. South Korea
 26. Portugal
 27. Greece
 28. Israel
 29. Slovenia
 30. Oman
 31. Ukraine
 32. Brazil
 33. Saudi Arabia
 34. Romania
 35. Argentina
 36. Panama
 37. Bahrain
 38. Belarus
 39. Chile
 40. Bulgaria
 41. Mexico
 42. Turkey
 43. Poland
 44. Uruguay
 45. South Africa
 46. Kazakhstan
 47. Hungary
 48. Croatia
 49. Costa Rica
 50. Czech Republic
 51. Thailand
 52. Indonesia
 53. Lebanon
 54. Morocco
 55. Colombia
 56. Latvia
 57. Malaysia
 58. Jordan
 59. Philippines
 60. Bolivia
 61. Azerbaijan
 62. Vietnam
 63. Ecuador
 64. Egypt
 65. Nigeria
 66. Angola
 67. Algeria
 68. Serbia
 69. Iran
 70. Dominican Republic
 71. Sri Lanka
 72. India
 73. Peru
 74. Burma (Myanmar)
 75. Pakistan
 76. Ghana
 77. Tanzania
 78. Tunisia
 79. Guatemala
 80. Kenya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here