முல்லைத்தீவில் அபிவிருத்தியை நோக்கிய விசேட கலந்துரையாடல்

மக்களின் உரிமைப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் மற்றும் அவர்களை அபிவிருத்தி நோக்கி நகர்த்தும் விடயங்களும் சமாந்திரமாக செல்லும் தண்டவாளங்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்ட பணிப்பாளர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியை நோக்கிய விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய்க்காப்பு, சிறுவர்களுக்கு பாதுகாப்பு போன்ற ஐந்து வேலைத்திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தியினை குறிக்கோளாக முன்வைத்து ஏற்படுத்தப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக இன்றைய கலந்துரையாடல் அமைந்துள்ளது.

மேலும், மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதேவேளை உரிமைப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான விடயங்களும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்கள் இரண்டும் தண்டவாளங்களாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் தான் எமது சமூகத்திற்கு தேவையானவற்றை பெற்று கொள்ள முடியும். அவ்வாறு இல்லையென்றால் எமது சமூகம் பின்நோக்கி சென்றுவிடும்.

எனவே மக்களின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் செயற்படும் அதேவேளை அபிவிருத்தி தொடர்பான வேலைகளை ஜனாதிபதி செயலகத்தினூடாக நாங்கள் செயற்படுத்தவுள்ளோம்.

இதன் மூலம் எமது சமூகம் முன்னேற்றம் அடையும் என பிரபா கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here