இலங்கையுடனான உறவை பலப்படுத்தி முன்னோக்கி செல்வோம்

ஜனநாயக குறிக்கோளுடன் பயணிக்கும் நாடுகள் என்ற ரீதியில் இலங்கையுடனான உறவை பலப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கான வாய்ப்புள்ளதென பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் ஜனாதிபதியை நேற்று (வெள்ளிக்கிழமை) டாக்காவிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கிராமத்திலிருந்து வந்தவரான ஜனாதிபதி மைத்திரிபால மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். அவரது சேவை பாராட்டத்தக்கது என்றார்.

அத்துடன், இலங்கை- பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு இரு தரப்பிற்கிடையே அடிக்கடி சந்திப்புகளை மேற்கொள்வது அவசியம் என்றும் கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஷ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் அன்பான வரவேற்பிற்கும், விருந்தோம்பலுக்கும் நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here