பிரான்ஸ் ஜனாதிபதியின் கருத்து!

எங்களுக்கு நம்பகத் தன்மையுடைய நட்புக் கிடைத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி எங்களுக்கு கிடைத்த புதிய நண்பர்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் சுதந்திர தின நிகழ்வின் இறுதிய நிகழ்வில் உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எங்களை யாரும், எவரும் பிரி்த்துவிட முடியாது. எங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்த நட்பை பிரிக்க முடியாது. டொனால்ட் ட்ரம்ப், மற்றும் அவரது மனைவி எங்களுக்கு கிடைத்த புதிய நண்பர்கள்.

அமெரிக்காவையும் எங்களையும், யாராலும், எப்போதும் பிரிக்க முடியாது. ட்ரம்ப் தம்பதியினருக்கு என்னுடைய நன்றிகள்.

இன்று நாங்கள் பிரான்ஸ் நாட்டை கொண்டாடுகிறோம். சுதந்திரக் காற்றை கொண்டாடுகின்றோம். இன்றைய நாளில் அனைவரையும் சமத்துவமாக நடத்துவோம் என சபதம் எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here