வெளிநாட்டில் தவறாக செயற்பட்ட இலங்கையர்கள்! இருவர் நாடு கடத்தல்.

குவைத்தில் போக்குவரத்து மீறல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 68 பேர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜுலை 2ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளை 31,576 போக்குவரத்து மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் பொலிஸாரால் 1,033 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 68 பேர் கைது செய்யப்யபட்டுள்ளதுடன் 2 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுமாறு வீதியில் பயணிப்போருக்கு பொது உறவுகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

போக்குவரத்தில் ஈடுபடும் போது போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கை தம்பதி மற்றும் எகிப்து நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Farwaniya பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரின் காரை கண்ட இலங்கை தம்பதி அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் பின்னால் துரத்தி சென்று பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் வேலைத்திட்டம் குவைத் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here