கிளிநொச்சி விஜய் நற்பணிமன்றத்தினால் டெங்கு ஒழிப்பு செயல்திட்டம்.

கிளிநொச்சி விஜய் நற்பணிமன்றத்தினால் டெங்கு ஒழிப்பு செயல்திட்டம்.

கிளிநொச்சி விஜய் நற்பணிமன்றத்தினால் டெங்கு ஒழிப்பு துப்பரவு பணியானது கிளிநொச்சி சுகாதார திணைக்களத்தின் உதவியுடனும் கிளிநொச்சி மத்திய சுற்றாடல் அமைச்சின் பங்களிப்புடனும் கிளிநொச்சி பிரதேச சபையின் அனுமதியுடனும், இன்று காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.துப்பரவு பணியானது திருநகர், உதய நகர், ஜேந்திநகர், கனகபுரம், கிளிநொச்சி, ஆகிய இடங்களில் உள்ள டெங்கு  தேங்கும் பொருட்களை அகற்றி அவற்றை உமையாழ் புரத்தில் சரியான முறையில் கொண்டு சென்று கொட்டப்பட்டு உள்ளது.இனிவரும் காலங்களில் இது போன்று கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக சேவைகள் செய்யப்படும் என்றும் கிளிநொச்சி விஜய் நற்பணிமன்றத்தின் உறுப்பினர்கள் கூறியிருந்தனர் இதில் முதியவர்கள்,சிறுவர்கள், பெண்கள் என பலர் இந்த துப்பரவு பணியில் முன்வந்து செயற்ப்பட்டுள்ளனர்.   

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here