கோலாகலமாக நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முதல்நாள் திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முதலாம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, மட்டக்களப்பு நீர்பாசன திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

ஆலயத்தின் தம்பபூஜை நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், சிவன், முருகன் ஆகியோருக்கு விசேட பூஜைகளும் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, இசைக்குழு நாட்டியம் என்பன மத்தியில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here