சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

பொகவந்தலாவயில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் ஐவரும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 18ஆம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவ டியன்சின் மற்றும் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here