சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி மற்றும் கிளித்தீவு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான வலைகளைப் பயன்படுத்தி நேற்று மீன்பிடியில் ஈடுபட்டபோதே கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய 3 படகுகளும், சட்டவிரோத 03 வலைகள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 20 கிலோகிராம் மீன்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக புத்தளம் உதவி கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here