சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவிய பிரதி பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர்தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து ஊர்காவற்றுறை பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதுஇந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சுவிஸ்குமார் என்ற பிரதான சந்தேகநபர் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்றிருந்தார். இதனையடுத்து அவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே, சந்தேகத்திற்குரியவர் தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளார்.

லலித் ஜெயசிங்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராகசெயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here