டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி யாருக்கு? செல்வம் அடைக்கலநாதன் பதில்

வட மாகாண அமைச்சராகவுள்ள டெனீஸ்வரனை பதவி நீக்கியதும் யாரை அமைச்சராக பரிந்துரைப்பது என ரெலோவின் அரசியல் குழு இன்று வவுனியாவில் ஆராய்ந்துள்ளது.

இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டபோது,

கட்சி விதிமுறைகளை மீறி வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் செயற்பட்டு வருவதாகவும் அவரை அமைச்சு பதவியில் இருந்து நீக்குமாறும் வட மாகாண முதலமைச்சருக்கு எமது கட்சி பரிந்துரைத்திருந்தது.

இந் நிலையில் அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கும் பட்சத்தில் தமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிக்க பரிந்துரைப்பது என்பது தொடர்பாக இன்று வவுனியாவில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் அரசியல்குழு கூடி தீர்மானித்திருந்தது.

எனினும் இக் கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படாமையினால் நாளை அனைத்து அரசியல்குழு உறுப்பினர்களும் தொலைபேசி மூலமாக தமது தெரிவுகளை தெரிவிப்பது எனவும் அதன் பின்னர் உடனடியாக முதலமைச்சருக்கு ரெலோ கட்சியின் சார்பில் புதிய அமைச்சருக்கான நபரை பரிந்துரைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here