யாழ்.வர்த்தகர் மாயம்! கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம்?

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஊடகவியலாளர் ஒருவரின் தந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று காணாமல் போயுள்ளதாகவும், வர்த்தகர் என்பதால் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

காணமால்போன வர்த்தகர் 63 வயதுடைய வே. நடராஜன் எனவும் நாவலர் வீதியில் அவருக்கு தனியான வர்த்தக நிலையம் ஒன்று உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here