இரண்டு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிரமமானது!

இரண்டு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தாலும் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இணைந்து பணியாற்றி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் துறைகளில் பணிப்புரியும் மத்தியளவிலான வருமானத்தை பெறும் ஊழியர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 500 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ இலாபம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாது.

மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை பார்த்து எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் மக்களால் அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அதேவேளை நாட்டின் கடன் தேவையை பூர்த்தி செய்ய போட்டியான வர்த்தக பொருளாதாரம் அவசியம்.

2020 ஆம் ஆண்டில் கடனை கட்டி முடிக்க கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவோம். சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில் மேலும் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் ஊடாக மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here