இலங்கையில் நீதித்துறை சட்டமா அதிபரின் கட்டுப்பாட்டில்!

இலங்கையில் நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது இலங்கை பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் நீதித்துறையின் கரங்கள் சட்டமா அதிபர் மூலமாக கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது.

எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் இலங்கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here