கடலில் தவித்த யானையை காப்பாற்றிய கடற்படையினருக்கு பாராட்டு

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தின் கொக்குத்தொடுவாய் கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்ட கடற்படையினருக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இவர்களை சந்தித்து உரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போதே, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த யானையை மீட்கும் பணிகளில் ஈடுப்பட்ட கடற்படையினருக்கு தனது வாழ்த்துக்களை கடற்படை தளபதி தெரிவித்தார்.

கடந்த 11ம் திகதி கொக்குத்தொடுவாயில் இருந்து 8 மைல்கல் தூரத்தில் அடித்துச்செல்லப்பட்ட யானை ஒன்றை சுமார் 6 மணி நேர போராட்டத்தின் பின்னர் கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடுத்திருந்தனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேக தாக்குதல் படகினால் இந்த யானை அடித்து செல்லப்படுவது முதலில் கண்காணிக்கப்பட்டுள்ளது.

பின்னர் யானையை காப்பாற்றுவதற்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றுமொரு தாக்குதல் படகு மற்றும் கடற்படை குழுவினரை விரைவாக அவ்விடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் 2 செட்ரிக் கப்பல்களினால் 7 கடற்படை குழுவினர் யானையை காப்பாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பாரிய அளவிலான கயிறு பயன்படுத்தி ஆழ்கடலில் சிக்கியிருந்த யானையை கரைக்கு கொண்டு வந்து, புல்மூட்டை, யான்ஓயா பிரதேசத்திற்கு அழைத்து வந்து வனவிலங்கு அதிகாரிகளிடம் குறித்த யானை ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here