கிளிநொச்சி – கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் இணைத்தலைவர்களான மாவை சேனாதிராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here