கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகள் கவனயீர்ப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகள் கவனயீர்ப்பு 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது,
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் தாம் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது கரைச்சி பிரதேச செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியதுடன் இம்  முடிவுகள் தம்மால் எடுக்கப்பட்டவை அல்ல இதில் உள்ள குறைபாடுகளை  மீள்பரிசீலனை செய்வதற்கு  குழு ஒன்று உள்ளது அது உங்கள் கிராமத்துக்கு வருகைதரும் போது அவற்றை நீங்கள் தெரிவிக்கலாம் அதனை நாம் பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்யலாம் என  தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.   
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here