நல்லிணக்கம் தொடர்பாக சமயசார் பாடசாலைக் கல்வி முறையில்

நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையின் சமயசார் பாடசாலைக் கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் என்ற கருப்பொருளினை அடிப்படையாக கொண்ட நிகழ்வு மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் தன்னாமுனை மியானி மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்எம். சுஹைர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.அத்தோடு, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் முரளிதரன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என மேலும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வின்போது பல்வேறு கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எண்ணக்கருவினை இலங்கையின் சமயசார் பாடசாலைக் கல்வி முறைமையினுள் நிறுவகப்படுத்தல் தொடர்பாக சத்தியப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here