பேஸ்புக் ஊடாக நடத்தப்பட்ட விருந்து! இரு பெண்களுக்கு ஏற்பட்ட அவலம்

இலங்கையில் தற்போது பேஸ்புக் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள் விருந்து வைக்கும் நடைமுறை ஒன்று தீவிரம் அடைந்துள்ளது.

இவ்வாறு நடைபெற்ற விருந்து ஒன்றுக்கு சென்ற மூன்று பெண்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தை நிறைவு செய்து வீடு திரும்ப ஆயத்தமாகிய மூன்று பெண்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியுள்ளனர்.

இதன்போது இடையில் இன்னுமொரு இளைஞர் அந்த முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளார். இந்நிலையில் முச்சக்கர வண்டி வேறு திசையை நோக்கி செல்வதனை அவதானித்த பெண் ஒருவர் அதில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். .

ஏனைய இரண்டு பெண்களை காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் காப்பாற்றப்பட்ட இரண்டு பெண்களும் சட்ட வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொழிலுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இந்த 3 பெண்களும் விருந்திற்கு சென்றுள்ளனர். 23 முதல் 25 வயதுடைய இந்த பெண்கள் ஹங்குரன்கெத்த மற்றும் பொந்தகான பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

பேஸ்புக் ஊடாக ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தொன்று நேற்று நடத்தப்பட்ட நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த விருந்து நிகழ்வில் போதைப்பொருள் பயன்படுத்தியதனால் பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையால் இந்த நிலை ஏற்பட்டது.

இந்த விருந்து நிகழ்வில் ஆயிரத்துக்கும் முற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் பேஸ்புக் ஊடாக நட்பு வட்டத்தை உருவாக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here