மாற்றுத்திறனாளிகளுக்கு இடையிலான பரா ஒலிம்பிக் தெரிவுப் போட்டிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் 2017 இற்கான தெரிவுப் போட்டிகள் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் தெரிவுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

வாழைச்சேனை கோறளைப்பற்று, ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, கிரான், வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த தெரிவுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டி நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சமூகசேவை உத்தியோகஸ்தர்கள், கிழக்கு மாகாண சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், மத்தியரசின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பி 2017 இறுதிப் போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் 5, 6 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here