முன்னாள் கடற்ப டைப் பேச்சாளர் கைதுக்கு விமல் கண்டனம்!

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை முன்னாள் பேச்சாளரான கொமடோர் டீ.கே.பி.தஸநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொமடோர் தஸநாயக்க மிகத் திறமைவாய்ந்த ஓர் அதிகாரி. அவர் நாட்டிற்காக பெரிதும் பாடுபட்டவர். அவரைக் கைது செய்தது பெரும் அநீதி என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக் கடற்படை வரலாற்றில் தனது சாதனைகளுக்காக இருமுறை பதவியுயர்வு பெற்ற அவரை சில பயங்கரவாதிகள் காணாமல்போனதற்காக கைதுசெய்து சிறையிலடைத்திருப்பது நியாயமற்றது.

எனவே, அவரை உடனடியாக விடுதலைசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here