மூன்று முக்கிய அமைச்சர்கள் பற்றி ரணிலுக்கு முறைப்பாடு செய்ய நடவடிக்கை.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு முறைப்பாடு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அமைச்சர்களின் நடவடிக்கைகளால் நல்லாட்சி அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதுடன், கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அக்கட்சியின் ஒரு சில அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முறைப்பாடொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக அக்கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் இது தொடர்பில் கூடி ஆராய்ந்த பின்னர் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here