வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்

வவுனியா – தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றதுடன், வடமாகாணகல்வி பண்பாட்டு அலுவலக்கள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவு உரையினை தமிழ் மணி அகளங்கள் நிகழ்த்தியுள்ளது. வவுனியா விபுலானந்தக் கல்லூரி மாணவர்கள் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலை பாடியதுடன், சோமசுந்தரப்புலவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.ஆடிப்பிறப்பை முன்னிட்டு ஆடிக்கூழ், கொளுக்கட்டை பரிமாறப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதான அனுசரணையினை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரவீந்திரன், நகரவரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ். சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன். ஆர் கதிர்காமராஜர் ஆகியோரால் ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோஹன புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் இ.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகஸ்தர் வீ. பிரதீபன், மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் எஸ். எஸ். வாசன், முன்னாள் நகர உப பிரத சந்திரகுலசிங்கம், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொது அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.     

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here