ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ள புதிய சேவை!

கோவை-கொழும்பு இடையே விமான சேவையை அறிமுகம் செய்கிறார் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அலுவலர் சிவராமச்சந்திரன். உடன், மண்டல மேலாளர் லால் பெரேரா, மேலாளர் எஸ்.பி.மோகன்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சார்பில் கோவை- இலங்கை தலைநகர் கொழும்பு இடையே விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அலுவலர் சிவராமச்சந்திரன் கூறியதாவது:

கோவை-கொழும்பு நகர் இடையே வாரத்துக்கு நான்கு நாள் விமான சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சார்பில் இந்தியாவில் உள்ள 14 நகரங்களில் இருந்து கொழும்பு நகருக்கு வாரத்துக்கு 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், முக்கிய நகரங்களில் இருந்து விமான சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்பு நகரில் இருந்து புறப்படும் விமானம் பிற்பகல் 2.35 மணிக்கு கோவை வந்தடையும்.

பின்னர், கோவையில் இருந்து மாலை 3.35 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொழும்பு சென்றடையும்.

12 பிசினஸ் பிரிவு, 138 எகனாமி பிரிவு இருக்கைகள் கொண்ட அதிநவீன ஏர் பஸ் ஏ320 என்ற விமானம் இயக்கப்படுகிறது. இத்துடன் சரக்குச் சேவையும் அளிக்கப்படவுள்ளது.

விமான சேவையின் அறிமுக சலுகைக் கட்டணமாக செப்டம்பர் 30ம் தேதி வரையில் இலங்கை ரூபா 28,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here