அங்கொட லொக்கா பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல்

கடுவல சமயங்க உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான அங்கொட லொக்கா முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லசந்த ஷந்தன பெரேரா என்ற அங்கொட லொக்கா, தொலைபேசியூடாகவே முல்லேரியா பொலிஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தனது உதவியாளர் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் போது இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என அங்கொட லொக்கா தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அங்கொட லொக்கா உள்ளிட்ட இருவர் கடந்த மே மாதம் இந்தியாவின் சென்னை நகரத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து சட்டவிரோதமாக டுபாய் நாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை அந்தநாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகள் போன்று இந்திய சிறைச்சாலைகளிலும் தொலைபேசிகளில் பேசக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவும் அங்கொட லொக்கா இலங்கையில் உள்ள தனது நண்பர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பிணையில் விடுதலையாகிய தான் தப்பிச் சென்றுள்ளதாக கூறியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here