அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

அடுத்து வரும் சில தினங்களுக்கு நாட்டின் ஒருசில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டைமாவட்டங்களிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்துஅம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக்காணப்படுமெனவும், அங்கு காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே இந்த அறிவுறுத்தலை கருத்திற்கொண்டு கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள்அவதானத்துடன் இருக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here