அன்பே சிவம் அமைப்பினூடாக இலவச கல்விக்கருத்தரங்கு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த கல்விக் கருத்தரங்கு லண்டன் அன்பே சிவம் அமைப்பின் அனுசரணையில் வீரமுனை இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயத்தில் நடத்தப்பட்டுள்ளது.

அன்பே சிவம் அமைப்பானது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் கல்விக் கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை இந்த கருத்தரங்கினை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி ஆசிரியர்கள் நடத்தியதுடன், இதற்கான ஏற்பாடுகளை வீரமுனை காயத்திரி சனசமூக அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here