அமெரிக்காவில் கனமழை : வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், 9 பேர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒருவர் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர்.

எனினும், வெள்ளம் வருவது குறித்து உரிய முன்னெச்சரிக்கை எதுவும் அளிக்காததால், இந்த விபரீதம் நடந்து விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here