அரசியலுக்காகப் பொய் உரைக்கின்றார் விமல்.

கடற்படையினரின் சாட்சியங்களின் அடிப்படையில் தான் கொமடோர் தஸநாயக்க கைதுசெய்யப்பட்டார். மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுவதைப் போன்று எங்கள் பிள்ளைகளுக்கு விடுதலைப்புலிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை. அரசியலுக்காக விமல் வீரவன்ச பொய் உரைக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்களின் பெற்றோர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எமது பிள்ளைகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நாம் 2009 ஆம் ஆண்டிலிருந்தே விசாரணைக்குக் கோரிக்கை விடுத்து வந்துள்ளோம்.

கடந்த காலங்களில் மூடிய அறைக்குள் விசாரணைகள் இடம்பெற்றன. அங்கு என்ன நடக்கின்றது என்பது யாருக்கும் தெரியவரவில்லை. தற்போது பகிரங்கமான விசாரணை நடைபெறுகின்றது.

கடற்படையினர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே கொமடோர் தஸநாயக்க கைதுசெய்யப்பட்டார்.

மேலும், உண்மை இதுவாக இருக்க மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அரசியலுக்காகப் பொய் உரைக்கின்றார் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here