உயிரிழந்து ஒரு மாதத்தின் பின் அடக்கம் செய்யப்படும் பெண்ணின் சடலம்

கிளிநொச்சியில் விபத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் ஒரு மாதத்திற்கு பின் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த மாதம் விபத்தொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாததை அடுத்து அடக்கம் செய்யுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கமைவாக இன்று குறித்த சடலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அரச செலவில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here