ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் 75 இலங்கையர்களுக்கு தொடர்பு!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இலங்கையர்கள் தொடர்பு வைத்துள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போராடும் நான்கு இலங்கையர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் 75 பேர் தற்போதும் இலங்கையில் உள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு உதவிய இலங்கையர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

கடந்த காலங்களில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைவதற்காக இலங்கையர்கள் 6 பேர் சிரியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் அபுதுஜான் தாஜுடீன், நிலாம், இஷான், தஸ்தீர், ரோஸ் மற்றும் அமீன் எனபவர்களாகும்.

இந்த 6 பேருடன் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 75 பேர் சிரியாவுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்த 6 பேரில் அபுதுஜான் மற்றும் நிலாம் ஆகிய இருவர் தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here