கட்டுநாயக்க விமானப் படை முகாமின் பின்புறத்தில் பச்சிளம் குழந்தையின் சடலம்

கட்டுநாயக்க விமானப் படை முகாமின் பெண்கள் விடுதியின் பின்புறத்தில் அழுகிய நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியின் பின்புறத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி ஒன்று இருப்பதை கண்டுள்ளனர்.

பின்னர் விமானப்படை முகாமின் உயர் அதிகாரி ஒருவருக்கு தகவல் வழங்கியதையடுத்து சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதியை சோதனையிட்ட போது அதில் அழுகிய நிலையில் குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கறுப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் துணியினால் சுற்றப்பட்டு பச்சிளம் குழந்தையின் சடலம் காணப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பொலிஸார் பெண்கள் விடுதியினுள் சோதனை மேற்கொண்ட போது விடுதியிலுள்ள படுக்கை ஒன்றின் விரிப்பில் இரத்தம் படிந்திருந்ததை அவதானித்துள்ளனர்.

எனினும் அக்கட்டிலில் தங்கியிருந்த விமானப்படை வீராங்கனை வயிற்றுவலியின் காரணமாக விமானப்படை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணிடம் சீதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விக்ரமசிங்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here