கனடாவில் குடியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கை அகதிகள்

கனடாவில் தங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஹொங்கொங்கில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இரண்டு இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வெளியிட்ட முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வட் ஸ்நோடனுக்கு கடந்த 2013ம் ஆண்டு இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த குடும்பங்கள் ஹொங்கொங்கில் அடைக்கலம் கொடுத்திருந்தனர்.

இந்தநிலையில், தற்போது அவர்கள் ஹொங்கொங்கில் இருந்து நாடு கடத்தப்படும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

தங்களின் பிள்ளைகளையும் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் இலங்கை அகதிகள், கனடாவில்அரசியல் அடைக்கலம் கோரியுள்ளனர்.

ஹொங்கொங்கில்இருந்து தாங்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாக, தங்களை கனடாவில் குடியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது ஹொங்கொங்கில் இலங்கை அகதிகளுக்கு அரசியல் அந்தஸ்தை பெற முடியாத நிலையில், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தநிலையிலேயே, அவர்களது சட்டத்தரணிகளால் குறித்த குடும்பத்திற்கு கனடாவில் அகதி அந்தஸ்து வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

குறித்த இலங்கையர்கள் உரிய ஆவணங்களை வழங்கத் தவறியமையே நாடு கடத்தப்படும் நெருக்குதலுக்கு காரணம் என இவர்களது விசாரணைகளைக் கையாளும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அகதிகளின் பிள்ளைகளும் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இதனை தடுக்க குறித்த அகதிகளின் சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் மிகப் பெரிய புலனாய்வு நடவடிக்கைகளை உலகத்திற்கு வெளியிட்ட அந்நாட்டின் முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்நோவ்டனுக்கு ஹொங்கொங்கில் தங்குமிட வசதிகளை வழங்கியதை அடிப்படையாக கொண்டு, புலனாய்வுப் பிரிவினர் தம்மை பின் தொடர்வதாக ஹொங்கொங்கில் தங்கியிருக்கும்இரண்டு இலங்கை அகதிகள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

இலங்கையை சேர்ந்த சுப்புன் கெல்லபாத்த, நதீகா நோனிஸ் அவர்களின் இரண்டு பிள்ளைகள் மற்றும் இராணுவத்தில்இருந்து தப்பிச் சென்றவரான அஜித் புஸ்பகுமார, பிலிப்பைன்ஸை சேர்ந்த வனேஸா ரொடெல் மற்றும் அவரின் மகள் ஆகியோருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் புலனாய்வுத்துறை அதிகாரியான எட்வட் ஸ்நோடன் தற்பொழுது ரஷ்யாவில் மறைந்து வாழ்ந்து வருகின்றார்.

இந்தநிலையில், தன்னைக் காப்பாற்றிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுங்கள் என எட்வட் ஸ்நோடன் ஹொங்கொங் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here