சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாரின் அசமந்த போக்கு

கிளிநொச்சி – பளைப் பிரதேசத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது மக்களும், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸார் இதற்குத் துணை போவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு பொலிஸார் எவரும் சமுகளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிளாலி, புலோப்பளை, அல்லிப்பளை , அறத்திநகர், ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களிலும், கடற்கரையோரப் பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், உவர் நீர் உட்புகும் அபாய நிலை காணப்படுகின்றது எனவும் இதனை விட சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடுகின்ற பலர் குழுக்களாக சண்டையிட்டுக் கொள்வதும் அதிகரித்து வருகின்றதாக கூறப்படுப்படுகின்றது.

இந்த விடயத்தை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற போதும் பொலிஸார் பராபட்சமாக நடப்பதுடன், சட்டவிரோத மணல் அகழ்வுகளுக்கும் இந்த பகுதிகளில் இருக்கின்ற ஏனைய வளங்களை அழித்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு துணை நிற்கின்றனர் என கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளாலும், பொதுமக்களாலும் நேற்றைய தினம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் பொறுப்புக்கூற வேண்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த கூட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கப்பட்டு இடம் ஒதுக்கப்பட்படிருந்த போதும், பொலிஸ் அதிகாரிகள் எவரும் சமுகளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here