சாவகச்சேரியில் திடீரென ஏற்பட்ட குழப்பம்!

சாவகச்சேரியில் இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இருதரப்பு சாரதிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதங்களால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டது.

யாழில் இருந்து வவுனியாவுக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தை முன் செல்ல விடாமல் தனியார் பேருந்தின் சாரதி பயணித்த நிலையிலேயே குறித்த பேருந்துகளின் போக்குவரத்தில் தடையேற்ப்பட்டது.

இதனை அவதானித்த பயணிகள் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பேருந்தை மறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here