சீன வெள்ளப்பெருக்கு: 18 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஜிலின் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் நேற்று(திங்கட்கிழமை) தெரிவித்துள்ளனர்.

மாகாணத்தில் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் பெய்த கடும் மழையை தொடர்ந்து குறித்த பிராந்தியமே வெள்ளத்தில் மூழ்கியது.

கடும் வெள்ளத்தினால் ஜிலின் மாகாணம் பாரியளவில் பாதிக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதியை சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக நகரின் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரண அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜிலின் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 18 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here