டெங்கு பரவும் சூழலினை தடுக்க ஹட்டனில் அறிவுறுத்தல் பேரணி

நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பினை தொடர்ந்து பொது மக்களை அறிவுறுத்தும் முகமாக ஹட்டனில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் இன்று ஹட்டன் ரிகோபோத் பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு பரவும் சூழலினை தடுக்கும் பேரணியூடான வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணி ஹட்டன் கொமர்ஷல் வங்கிக்கு முன்னால் ஆரம்பமாகி ஹட்டன் கார்கீல்ஸ் சந்தி வரை சென்றுள்ளனர்.

இந்த பேரணியில் கழிவுகளை வகைப்படுத்துவதற்கு வெவ்வேறான வர்ணங்களில் பொலித்தீன் பொருளுக்கு ஒரு வர்ணமும், உக்கும் குப்பை, கண்ணாடி, உலோகங்கள் போன்றவற்றினை பிரித்து வர்ண குப்பை தொட்டில்களில் இடுவது தொடர்பாக பொது மக்களுககு அறிவுத்தும் வகையில் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கழிவு பொருட்களை மீள் சுழற்சி செய்து எவ்வாறு சுற்றுப்புற சூழலை அழகுபடுத்தலாம் என்பது தொடர்பாக செயல்முறை செயற்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் வீதியின் இரு மருங்கிலும் காணப்படும் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவு பொருட்களையும் அகற்றியுள்ளனர்.

அத்துடன், டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கே.பாலகிருஸ்ணன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஹட்டன் டிக்கோயா நகர சபை செயலாளர் மற்றும் அதிகாரிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here