ட்ரம்பினால் அமெரிக்கா சென்றடைந்த மாணவிகள்

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக்ஸ் போட்டி வாஷிங்க்டனில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டி நேற்றைய தினம் (17) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்துறைகளில் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்காக இது நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க தேர்வான ஆப்கான் மாணவிகளின் அமெரிக்கப் பயணத்துக்கான வீசா வழங்கப்படவில்லை. அவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கடுமையான வீசா கட்டுப்பாடுகளே அதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் அதே டொனால்ட் ட்ரம்ப் இவர்கள் விவகாரத்தில் நேரடியாக தலையிட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு வீசா அளிக்கப்பட்டது.

பலவித தடைகளைக் கடந்து இவர்கள் அமெரிக்கா வந்திருப்பது ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு நம்பிக்கையளிக்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here