நேரடி கள விஜயத்தில் வடக்கு முதலமைச்சர்!

யாழ். கல்வியங்காடு பொதுச்சந்தையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நேரடி கள விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் விடுத்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு அந்த பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதுச் சந்தையில், மலசலகூட வசதிகள் சீரின்மை, உரிய முறையில் சந்தையை சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக வியாபாரிகள் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் காணப்படும் குறைபாடுகளை கேட்டுக்கொண்ட முதலமைச்சர் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் குறைபாடுகளை சீர்செய்வது தொடர்பில் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here