பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்குள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,ரஷ்யாவின் Bering தீவிலிருந்து சுமார் 200 கி.மீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கி.மீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 7.7 அளவாக பதிவாகியுள்ளது.

இதே வேளை திடீரென்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள Klyuchevskoy எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்குள் மூன்று முறை இதை விட சற்று குறைவான அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 0.5 மீற்றர் அளவிற்கு கடலில் உள்ள அலைகள் எழும்பும் என்பதால், அங்கு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் Emergencies ministry எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைதுவ அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here