போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் வவுனியாவில் கைது

கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற ஆறு இளைஞர்கள் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையிலேயே நேற்று மாலை கனகராயன்குளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனகராயன்குளத்தில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிசார் கண்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த இளைஞர்களை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, சகோதரர்கள் இருவர் உட்பட 19 – 21 வயதான ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கனகராயன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here