மயக்கமடைந்த தன் தாயின் உயிரை காப்பாற்ற 5 வயது சிறுவன் செய்த செயல்!

பிரித்தானியாவின் வேல்ஸில் உள்ள பிரிட்ஜென்ட் நகரை சேர்ந்தவர் நிக்கோலா ஜெங்கிஸ் (34) இவரது மகன் க்ய்ரான் டப் (5). கடந்த பெப்ரவரியில் க்ய்ரானை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப அவன் தாய் நிக்கோலா பரபரப்பாக வீட்டில் இயங்கி கொண்டிருந்தார்.

அப்போது, விட்டின் மாடிப் படியிலிருந்து கீழே இறங்கிய போது நிக்கோலா மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட சிறுவன் க்ய்ரான் தனது தாயை காப்பாற்ற சமயோஜிதமாக செயல்பட்டுள்ளான். அதாவது உடனடியாக 999 என்ற அவசர உதவி எண்ணுக்கு க்ய்ரான் போன் செய்துள்ளான்.

தாய் மயங்கி விழுந்துள்ளது குறித்து அதிகாரியிடம் க்ய்ரான் கூறியுள்ளான். போனில் பேசிய அதிகாரி உன் தாயால் உன்னிடம் பேச முடிகிறதா என கேட்டுள்ளார். அதற்கு இல்லை என க்ய்ரான் கூறியுள்ளான்.

பிறகு, உன் அம்மாவின் மீது ஒரு போர்வையை போர்த்து என அதிகாரி சிறுவனிடம் கூற தான் ஏற்கனவே அதை செய்து விட்டதாக க்ய்ரான் கூறியுள்ளான்.

பிறகு நினைவில் வைத்திருந்த தனது வீட்டு முகவரியை சரியாக க்ய்ரான் அவசர உதவி அதிகாரியிடம் கூறியுள்ளான். அப்போது, க்ய்ரான் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. வீட்டின் சாவி க்ய்ரான்க்கு எட்டாத உயரத்தில் இருந்துள்ளது.

ஆனால், க்ய்ரான் தனது தந்தையின் செருப்பை வைத்து எகிறி குதித்து புத்திசாலிதனமாக சாவியை மேலிருந்து எடுத்து கதவை திறந்துள்ளான். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர், மயங்கி கிடந்த நிக்கோலாவிற்கு அவசர சிகிச்சையளித்து உயிரை காப்பாற்றியுள்ளார்கள். இந்த சம்பவம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.

க்ய்ரான்க்கு தைரியமாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் லெவ்ரிக் விருது வழங்கப்பட்டுள்ளது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here