மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலி வழங்கல்

மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இலங்கை இராணுவ 23வது படைப்பிரிவு புனானை தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

புனானை 23வது படைப்பிரிவு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித பன்னவல தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் என்.சேனாதீர பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இராணுவ உயர் அதிகாரிகள், கோறளைப்பற்று மத்தி உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், மாற்றுத்திறனாளிகள், மதத் தலைவர்கள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், பிலியந்தலையை சேர்ந்த மாணிக்கக் கல் வியாபாரியும், தனவந்தருமான பிரியங்க புஸ்பகுமார என்பவரின் நிதி உதவியின் மூலம் ஐயாயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தில் முதல் கட்டமாக நூறு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here