முல்லைத்தீவு பாடசாலையில் வெடிப்பு சம்பவம்: 8 மாணவர்கள் வைத்தியசாலையில் 

முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவார பகுதியில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், 6 மாணவிகளும் 2 மாணவர்களும் மயக்கமடைந்துள்ளனர்.

மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்களை பிடிக்க பயன்படுத்தப்படும் “டைனமைட்” ரக வெடிபொருளே வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here