யாழில் தாயின் நகையை திருடிய மகன் கைது

யாழ். வடமராட்சியில் கரணவாய் வடக்கு பிரதேசத்தில் தாயின் நகையை திருடிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை காணாமல் போயுள்ளதாக தாயாரால் பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த தாயாரின் மகனின் மீது சந்தேகம் கொண்டு அவரை கைது செய்து விசாரணைகளை நடத்தினர்.

இதன்போது முச்சக்கர வண்டி வாங்குவதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த 66 ஆயிரம் ரூபா பெறுமதியான 2 பவுண் தங்க நகையை தாமே திருடியதாக குறித்த இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் வழக்கை பதிவு செய்துள்ள வல்வெட்டித்துறை பொலிஸார் குறித்த இளைஞனை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here