யாழ். செல்லும் விவியன் பாலகிருஸ்ணன்!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேசவுள்ளார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில், இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கும் அவர், பல்வேறு விடயங்கள் குறித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம் செல்லும் விவியன் பாலகிருஸ்ணன் வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசவுள்ளார்.

மேலும், சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை யாழ். பொதுநூலகத்துக்கு கையளிக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here