யாழ். நாவற்குழியில் அமைக்கப்படும் விகாரைக்கு தடை? விகாராதிபதி குற்றச்சாட்டு

யாழ். நாவற்குழி பகுதியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்தி பணிகளுக்கு வடக்கில் உள்ள தீவிர போக்குடைய அரசியல் வாதிகள் தடையை ஏற்படுத்துவதாக அதன் விகாராதிபதி ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விகாரையில் தாதுகோபுரம் கட்டுவதற்கு சாவகச்சேரி பிரதேச சபை தடை விதித்திருந்தது.

எனினும், குறித்த விகாரையில் தாதுகோபுரம் அமைப்பதற்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என சாவகச்சேரி நீதிமன்றம், சாவகச்சேரி பிரதேச சபைக்கு கடந்த 7ம் திகதி உத்தரவிட்டது.

இந்நிலையில். அதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், வடக்கில் உள்ள சில தீவிர போக்குடைய அரசியல்வாதிகள் விகாரையின் அபிவிருத்தி பணிகளுக்கு தடையாக இருப்பதாக அதன் விகாராதிபதி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் போது சட்டவிரோமான முறையில் பெரும்பான்மையின மக்கள் குடியேறிய பகுதியிலேயே இந்த விகாரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here