மன்னிப்பு கோர தயாராகும் தவ்ஹித் ஜமாத்

பௌத்த சமயத்தை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் ராசீக் ரப்ஃய்டீன் தெரிவித்துள்ளார்.

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் உட்பட 6 பேர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று இதனை கூறியுள்ளனர்.

முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற பெயரிலான குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மத உரையின் மூலம் பௌத்த மதத்தை அவமதித்துள்ளதாக சோரனாதொட்ட சந்திரரத்ன தேரர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தீர்மானம் குறித்து சட்டமா அதிபருக்கு தெரியப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here